வள்ளலார் சர்வதேச அறகட்டளை..
காலமும் அது கவர்ந்து வரும் கண்ணீரும்தான் எத்துனை வலிமையானது.! உயிரை மொத்தமாய் குடித்துவிடும் வலி கொண்ட கடினமான தருணத்தில் வரும் கண்ணீருக்கும் அது கொண்டுவரும் வார்த்தைகளுக்குதான் எத்தனை வலிமை..!!! கடவுளின் குழந்தைகளின் புன்னகையில் வாழும் நீங்கள் மனித தெய்வங்களே.. உடலற்ற ஓர் உயிர் கலவையாய் காற்றின் வழியெங்கும் உங்களுக்காய் நாங்கள்...,
Sunday, September 12, 2010
வள்ளலார் சர்வதேச அறகட்டளை ..
நிறமும், பணமும், குணமும் நாம் ஒவ்வொருவரையும் வெவ்வேறு சூழ்நிலைக்கு உருவாக்கி இருந்தாலும் மனிதன் மற்றும் மனிதம் என்ற கோட்ப்பாட்டின் கீழ் நாம் அனைவரும் ஒன்றே.
பசியால் அழத்துடிக்கும் ஒரு குழந்தை..
பிரிவால் சிரிக்க மறந்த ஒரு மனிதன்..
அம்மா என்று அழைக்க யாரும் இல்லாமல் அழும் பிஞ்சு..
அனாதைகள் என்ற வார்த்தையின் கண்ணீர் அழுத்தத்தில் வெதும்பி நிற்கும் அன்புகள்...
இந்த விசித்திரமான வாழ்க்கையில், கடவுளின் குழந்தைகள் இங்கே! நமது வள்ளலார் சர்வதேச அறக்கட்டளை இல்லத்தில்
உங்களை போன்ற மனிதக் கடவுளின் அன்பின் அடைக்கலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு குழந்தையின் புன்னகையில் வாழ்ந்து கொண்டிருக்கும் உங்களுக்கும் உங்களின் அழகிய மனதிற்க்கும் எங்களின் பாதம் பணிந்த நன்றிகள்.
உங்களை எங்கள் இல்லத்திற்கு வரவேற்ப்பதில் எங்கள் பிஞ்சுகள் புன்னகைக்கிறார்கள்..
நன்றிகள் கோடி மனித தெய்வங்களே..
உங்களின் புன்னகையில் வாழும்..
கடவுளின் குழந்தைகள்.
Subscribe to:
Posts (Atom)